செய்தி விவரங்கள்

இத்தாலிக்கே திரும்பி செல்லுங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதிக்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்தார். அப்போது அமேதி மாவட்டத்தில் உள்ள கவுரிகாஞ்ச் நகரத்திற்கு அவர் சென்றார்

அங்கு அவருக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வழங்கிய நிலங்களை திருப்பிக் கொடுங்கள். இல்லாவிட்டால் எங்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் தாருங்கள் என விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ராகுல் காந்திக்கு இங்கு நிற்கக் கூட தகுதி இல்லை. அவர் எங்களின் நிலத்தை ஏமாற்றி பறித்துக் கொண்டார். அவர் மீண்டும் இத்தாலிக்கே செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி சார்பில் மொத்தம் 65 ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்