செய்தி விவரங்கள்

வாரணாசி தொகுதியில் மீண்டும் நரேந்திர மோடி போட்டியிட வாய்ப்பு!

வரும் லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தனது வாரணாசி தொகுதியில் இருந்து போட்டியிடவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த லோக்சபா தேர்தலில் குஜராத்தில் வதேதரா மற்றும் உத்தரபிரதேசத்தின் வாரணாசி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் மோடி போட்டியிட்டார்.

இரு தொகுதிகளிலும் மோடி வெற்றி பெற்ற நிலையில், அதில் வதேதரா தொகுதி எம்பி பதவியை பின்னர் அவர் ராஜினாமா செய்துவிட்டு, வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக்கொண்டார். இந்த நிலையில், வரும் லோக்சபா தேர்தலின்போது மீண்டும் வாரணாசி தொகுதியில் இருந்து மோடி களம் காண உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசம் என்பது 80 லோக்சபா தொகுதிகள் கொண்ட பெரிய மாநிலம். அங்கு எந்த கட்சி அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ அதற்கு மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உத்தரபிரதேச மாநிலத்தை மையமாகக் கொண்டு அரசியல் காய் நகர்த்த, மோடி இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனிடையே காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட வேண்டும் என்று உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். எனவே பிரியங்கா காந்தியின் முடிவை பொறுத்து, வாரணாசி தொகுதியில் தேர்தல் மேலும் சுவாரசியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்