செய்தி விவரங்கள்

பாஜக கூட்டணி 271 தொகுதிகளைத்தான் வெல்ல முடியும்!

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியால், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று இந்தியா டுடே டிவி சேனல் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இந்தியா டுடே டிவி சேனல் மற்றும் கார்வி இன்சைட்ஸ் ஆகியவை இணைந்து தேசத்தின் மனநிலை என்ற பெயரில் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. இதில் கிடைத்துள்ள முக்கியமான அம்சங்களை பார்க்கலாம்.

பெரும்பான்மை தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 336 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை 257 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடியும். அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்தமுறை 59 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது. ஆனால் புதிதாக ஒருங்கிணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் சேர்த்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 272 தொகுதிகளை தொடக்கூடும் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பலர் கணிப்பு இந்தியா டுடே எடுத்துள்ள இந்த கருத்துக்கணிப்பில் 13 ஆயிரத்து 179 பேர் பங்கேற்று தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் அனைவரும் இணைந்து சுமார் 14 தொகுதிகளை வெல்லக்கூடும் என்று இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இவர்கள் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்க முன்வந்தால்கூட பெரும்பான்மையை பிடிப்பதற்கு ஒரு எம்பி பலம் குறைவாக இருக்கும் என்றும் அது கூறுகிறது.

அதிமுக ஆதரவு 14 தொகுதிகளை கைப்பற்ற கூடிய பிற கட்சிகள் என இந்த கருத்துக் கணிப்பு தெரிவிப்பது, அதிமுக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளைத்தான். இந்த கட்சிகள் தங்கள் ஆதரவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அளித்தாலும் பெரும்பான்மையை அது பிடிப்பது கடினம் என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.

44 சதவீதம் மேலும் இந்த கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகியவை தலா 44% வாக்குகளை பெறக்கூடும் என்றும், பிறர் 12 சதவீத வாக்குகளை பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் தொகுதிகள் என்று வரும்போது தேசிய ஜனநாயக கூட்டணி 257 தொகுதிகளிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 272 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று கூறுகிறது இந்த கருத்துக் கணிப்பு. பெரும்பான்மைக்கு தேவை 272 எம்பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்