செய்தி விவரங்கள்

தமிழகத்தில் முதலீடு செய்யும் டாப் நிறுவனங்கள்!

உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.3.44 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில், பெரிய நிறுவனங்கள் எந்த அளவுக்கு முதலீடு செய்துள்ளன என்ற விவரம் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு சார்பில், உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில், புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

2 நாட்கள் முடிவில், உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.3.44 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதில் சில பிரபல நிறுவனங்கள் செய்துள்ள முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

  • ரூ.12,000 கோடிக்கு அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்து
  • பிரபல கார் நிறுவனமான ஹுண்டாய் ரூ.7000 கோடிக்கு ஒப்பந்தம்
  • ரூ.3,100 கோடிக்கு எம்ஆர்எஃப் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்து
  • ரூ.1,250 கோடிக்கு பிஎஸ்ஏ நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்து.
  • யமஹா நிறுவனம் 1500 கோடிக்கு ஒபந்தம்
  • அல்லியான்ஸ் நிறுவனம் ரூ.9488 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து
  • ஃபாக்ஸ்கான் நிறுவனம் செய்யப்போகும் முதலீடு அளவு ரூ.2500 கோடி
  • நெய்வேலி நிலக்கரி கழகம், ரூ.23800 ோடிக்கு முதலீடு
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) ரூ.12,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
  • எய்சர் நிறுவனம் ரூ.1500 கோடிக்கு ஒப்பந்தம்.

முன்னதாக தொழில் துவங்க தமிழகம் நல்ல மாநிலம் என்றும், இங்கு குற்றச்செயல்கள் குறைவு என்றும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற தொழிலதிபர்கள் பலரும் புகழாரம் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்