செய்தி விவரங்கள்

தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பிக் பாஸ் நித்யா!

பிரபல காமெடி நடிகர் பாலாஜி மனைவியான நித்யா, பிக் பாஸ் சீசன் 2 நிகழ்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தார். தாடி பாலாஜியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் அவர், அந்நிகழ்ச்சியில் பாலாஜியுடன் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகும், இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தீரவில்லை. அந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் இடையே நடந்த சண்டைகள், சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியது. போட்டி முடிந்த பின்னர் பாலாஜியும் நித்யாவும் நட்புடன் பிரிந்து சென்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், நித்யா சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மும்பையில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக நித்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது உள்ளிட்டவை இந்த கட்சியின் முக்கிய நோக்கமாகும்.

 

சமீபத்திய செய்திகள்