செய்தி விவரங்கள்

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசுவதால் மீனவர் மற்றும் கடல்சார் ஊழியர்களை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்