செய்தி விவரங்கள்

தமிழகத்தை விட்டு கிளம்பும் ஏர்செல்…நிலாவில் டவர் அமைக்கும் வோடபோன்

தமிழகத்தில் பல கிராமங்களுக்கும் முதல் முதலில் தொலைப்பேசி சேவையை கொடுத்த ஏர்செல் நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் நாங்கள் களத்தை விட்டே செல்கிறோம் என்று அறிவித்து விட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் பிரபல தொலைதொடர்பு நிறுவனமாக விளங்கி வரும் வோடபோன், நோக்கியா மற்றும் ஆடி ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து நிலாவில் தங்கள் சேவையை அளிக்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளன.

மேலும் நிலாவின் மேற்பரப்பை இங்கிருந்தே துல்லியமாக காட்டும் வகையில் ஒரு கருவியையும் தயாரித்து அனுப்ப உள்ளனர்.

இதற்கென்றே மிகவும் எடை குறைவாக பிரத்யேகமாக நோக்கியா நிறுவனத்தால் ஒரு சாதனம் தயாரிக்கப்படுகிறது.

வரும் 2019ஆம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட் மூலம் திட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் வோடபோன் கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகள்